Search This Website

Loading...
News Update :

ஆன்லைனில் சம்பாதிக்க - தொழில் பயிற்சி

எங்கள் மூலம் பயிற்சி பெற்று வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் மாதம் இருபத்திஐந்தாயிரத்திட்கு(25000/-) மேல் சம்பாதிக்க உடனே தொடர்பு கொள்ளவும். பயிற்சி கட்டணம் ரூபாய் 2500/- மட்டுமே. Cell: 0-7373630788 - தொழில் உலகம்

தொழில் ஆலோசனை

சுய தொழில் தொடங்க,
தொழிலை மேம்படுத்த,
மெசினரிகள் வாங்க,
தொழில் சம்பந்தப்பட்ட லோன்கள்,
மார்க்கட்டிங் தொடர்பான சந்தேகங்கள் போன்ற அனைத்திற்கும் கட்டண ஆலோசனை பெற்றுக்கொள்ள தொடர்பு கொள்க:


செல்: 0 - 7373630788 சென்னை.

ஆன்லைன் வேலை - பெண்கள் மட்டும்

தமிழகம் முழுவதும் டிகிரி படித்த ஆங்கிலம் நன்கு படிக்கத் தெரிந்த லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் கம்பியுட்டர் இன்டர்நெட் கனேக்சனுடன் வைத்துள்ளவர்கள் மேலும் கம்பியுட்டரை வேகமாக கையாலத்தெரிந்தவர்கள் மட்டும் எங்கள் இணையத் தளத்தை பார்வையிட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்

இணையத்தள முகவரி :
www.onlineprojects.tk


.

.

போட்டியில்லாத தொழில் - நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பு

Saturday, 16 May 2015

 இன்றைய நவீன உலகில் பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் ஏராளம். மண்ணில் மட்கும் தன்மை இல்லாத பிளாஸ்டிக் பொருட்களால் இயற்கையும், சுற்றுச்சூழலும் மிக வேகமாக மாசுபட்டு வருகின்றன. இதுவே, பல்வேறு நோய்களுக்கும் காரணமாக அமைகின்றன.



 இதன் காரணமாகவே, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு பல்வேறு நாடுகளிலும் தடை விதிக்கப்பட்டு வருகிறது. நம் நாட்டில் கூட, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கூட, பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான பரப்புரைகளும், விழிப்புணர்வுகளும் அதிகரித்து வருகின்றன.

 இந்த நிலையில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வந்திருப்பதுதான் நான் ஓவன் எனப்படும் துணி போன்ற காகிதங்கள். இவை பார்ப்பதற்கு பிளாஸ்டிக் போன்றே அழகாகவும், பல வண்ணங்களிலும் காட்சிகளிக்கின்றன. பயன்படுத்துவதற்கு காகிதம் போன்றும், துணி போன்றும் இலகுவாக உள்ளன. இவை, பார்ப்பதற்கு துணி போன்று இருந்தாலும், பருத்தியை பயன்படுத்தி நூல்களால் நெய்யப்படுவது இல்லை. பாலி புரொப்பலீன் என்ற வேதிப் பொருளால் இவை தயாரிக்கப்படுகின்றன.

 குருணை வடிவிலான பாலி புரொப்பலீன் வேதிப் பொருளை, சூடு படுத்தும்போது, அவை சூடாகி, உருகுகின்றன. அதனை ஒரே சீரான வேகத்தில் சுழுலும் இரு உருளைக்கு இடைவே வைத்துஅழுத்தம் கொடுக்கும்போது, அவை துணி போல் இலகுவாக மாறுகின்றன. பிளாஸ்டிக் பொருட்களை போன்று, இவை உறுதியானவை. காற்று மற்றும் தண்ணீர் புகும் திறன் கொண்டவை. குறிப்பாக, மண்ணில் மட்கும் திறன் கொண்டவை என்பதால், இவற்றால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுவதில்லை. இதன் காரணமாக, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக நான் ஓவன் தயாரிப்புகள் இடம்பிடித்து வருகின்றன.

 மூலப்பொருட்கள், எந்திரங்கள்

 நான் ஓவன் பொருட்கள் குறிப்பிட்ட நீள, அகலங்களில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. நமது தேவைகளுக்கு ஏற்ப நாம் தான் அதனை துண்டு துண்டாக வெட்டி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவை, GSM அதாவது GRAM PER SQUARE METRE என்ற அலகினால் கணக்கிடப்படுகின்றன.

 நாம் தயாரிக்கும் பொருளை பொருத்து, அதன் GSM மாறுபடும். நான் ஓவன் தயாரிக்கும் ஆலைகளில் இருந்து இவை பெரிய பெரிய உருளை வடிவங்களில் பார்சல் செய்து அனுப்பப்படுகின்றன. இவற்றை இதன் விற்பனை மையங்களில், குறிப்பிட்ட கிலோ கணக்கில்தான் நாம் வாங்க முடியும். நான் ஓவனை நமது தேவைக்கு தகுந்தாற்போல், அளவெடுத்து வெட்டுவதற்கும், அவற்றை கொண்டு பொருட்களை தயாரிப்பதற்கும் பல்வேறு வகையான இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

 குறிப்பாக, நான் ஓவனை அளவெடுத்து வெட்டுவதற்கு டேபிள், மெஷின் கட்டர் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. வெட்டப்பட்ட நான் ஓவன்களை நமக்கு தேவையான பொருட்களாக மாற்றுவதற்கு தையல் மெஷின் போன்ற சீல்ட் மற்றும் ஸ்டிச்சிங் மெஷின்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது செமி ஆட்டோமேட்டிக் தயாரிப்பு முறை என்று அழைக்கப்படுகிறது.

 இதுதவிர, நான் ஓவனை இயந்திரங்களில் இணைத்துவிட்டால், அவையே அளவெடுத்து தேவையான அளவுகளில் வெட்டி, தேவையானப் பொருட்களை தயாரித்து, வெளியே அனுப்பி விடுகின்றன. இது ஆட்டோமெடிக் தயாரிப்பு முறை என்று அழைக்கிறது.

 தயாரிப்பு முறைகள்


 நான் ஓவன் தயாரிப்பு முறையை 3 பிரிவுகளாக பிரிக்கலாம்.

 1. கட்டிங் முறை :

 நமக்கு தேவையான அளவுகளை நாம் அளவு எடுத்து அதனை வெட்டிக் கொள்வது. இதற்கான பிரத்யேக டேபிள் ஒன்று உள்ளது. இதன் ஒருபுறத்தில், நான் ஓவன் உருளையை பொருத்தும் வகையில், இரும்புக் கம்பி ஒன்று உள்ளது. இதன் வழியாக நான் ஓவனை டேபிளில் அடுக்கடுக்காய் விரித்துக் கொள்ள வேண்டும். இதன் பின்னர் நமக்கு தேவையான வகைகளில் நான் ஓவனை அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் பிறகு, துண்டு துண்டாக அவற்றை வெட்டிக் கொள்ளலாம்.

 2. சீலிங் முறை:


 தையலுக்குப் பதிலாக \\\"டை\\\" எனப்படும் பிரத்யேக உருளை மூலம் அழுத்தம் கொடுத்து, நான் ஓவனின் இரண்டு புறங்களை இணைப்பது.

 3 ஸ்டிச்சிங் முறை (தையல் முறை) :

 தையல் இயந்திரத்தில் உள்ளது போன்று, ஊசி மூலம் நான் ஓவனை தைப்பது. சந்தை வாய்ப்புகள் நான் ஓவனின் இலகுவான தன்மை, காற்று மற்றும் தண்ணீர் புகும் திறன், பிளாஸ்டிக் போன்ற உறுதி போன்றவை, மருத்துவத்துறைக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது.

 இதன் காரணமாக, அவை முதலில் மருத்துவத்துறையில் தான் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்தன. அறுவைச் சிகிச்சைகளுக்கு, குறிப்பாக பிரசவம் போன்றவற்றுக்கு பயன்படுத்தும் வகையில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு, தூக்கி எறிந்துவிடும் வகையில் நான் ஓவன்களின் பயன்கள் இருந்தன.

 அதனால், தற்போது மருத்துவமனைகளில் படுக்கை விரிப்பான்கள், மருத்துவர்களின் கையுறைகள், அறுவைச் சிகிச்சைப் பிரிவில் அணியும் உடைகள், முகக் கவசம் போன்றவை நான் ஓவன்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. இதுதவிர, ஆயத்த ஆடைகள் தயாரிப்புத்துறையிலும் நான் ஓவன்கள் முக்கிய இடத்தை பிடிக்கின்றன.

 முந்தைய காலங்களில் ஆயத்த ஆடைகள் துறையில் பயன்படுத்தப்பட்டு வந்த காடாத்துணி அல்லது கேன்வாஸ் போன்றவற்றுக்குப் பதிலாக தற்போது நான் ஓவன் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஆண்களின் கோட்டின் உட்புறம், சட்டையின் காலர் போன்றவற்றில் இவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. சமையல் அறைகளில், வியர்வைத்துளிகள் மற்றும் தலை முடிகள் கீழே விழாமல் இருப்பதற்காக தலையில் அணியும் கவசமாக நான் ஓவன்கள் பயன்படுகின்றன.

 பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் தயாரிக்கவும் நான் ஓவன்கள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது அனைத்துக் கடைகளிலும், பாலிதீன் பைகளுக்கு மாற்றாக நான் ஓவன் பைகள் தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

 இதுதவிர, தாம்பூலப் பை, தலையணை உறை, வாகனங்களின் சீட் கவர், கம்யூட்டர் கவர், ஜன்னல் திரைகள், திரைச்சீலைகள், டேபிள் விரிப்புகள் என எங்கெங்கும் நான் ஓவனின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

போட்டோ ஸ்டுடியோ - தொழில்

செல்போன் கேமரா, வீட்டுக்கு வீடு கேமரா என இருந்தாலும், சிறந்த போட்டோக்கள் எடுக்க ஸ்டுடியோக்களைதான் மக்கள் நாடுகின்றனர். புகைப்பட கலை நுணுக்கமானது என்றாலும், பழகுவது எளிது. போட்டோ ஸ்டுடியோ வைத்தால் நன்கு சம் பாதிக்கலாம். அந்த காலங்களில்  டிஜிட்டல் கேமராக்கள் இல்லை. பிலிமில் படம் எடுத்து பிராசஸ் செய்ய வேண்டும். எடுத்த படம் நன்றாக வந்துள்ளதா என்பது பிராசஸ் செய்த பிறகுதான் தெரியும்.  படம் நன்றாக வராவிட்டால் திரும்ப படத்தை எடுக்க முடியாது. இதனால் எடுக்கும்போதே அதிக கவனத்துடன் எடுக்க வேண்டும். 


பிலிம் பிராசஸ் செய்யும்போதும் கவனத்துடன் செயல்பட வேண்டும். சிறப்பாக பிராசஸ் செய்தபோதிலும்  எடுத்தபோது உள்ள தரத்தை பின்னர் அதிகரிக்க முடியாது. பிராசஸ் முடிந்து படம் கையில் கிடைப்பதற்கு 2, 3 நாட்கள் ஆகி விடும்.  இப்போது  அப்படி இல்லை. ஆப்டிக்கல் லென்ஸ், மெகா பிக்ஸல், ஆட்டோமேடிக் மோடு உள்ள டிஜிட்டல் கேமராக்கள் வந்து விட்டன. படம் எடுக்கும்போதே டிஸ்பிளேயில் படம் தெரிகிறது. உரிய பட்டன்களை தட்டி கேமராவை தயார் செய்து கிளிக் செய்தால் படம் நன்றாக வருகிறது.

தேவையான அளவுக்கு வெளிச்சத்தை குறைக்கவோ, கூட்டவோ கம்ப்யூட்டரில் கலர் கரெக்ஷன் செய்து 100 சதவீத திருப்தியுடன் படங்களை கொண்டு வந்துவிடலாம். முன்பு போல் இல்லாமல் வீட்டில் நடைபெறும் சிறு விழாக்களை கூட, தங்கள் சொந்த கேமராவிலேயே பலர் படம் எடுத்து கொள்கிறார்கள். இருந்தாலும் போட்டோ ஸ்டுடியோவுக்கும் கிராக்கி இருக்கிறது. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க, திருமணம் போன்ற முக்கிய விழாக்களில் போட்டோ எடுக்க  ஸ்டுடியோவை தான் நாடுகின்றனர்.

திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் வீடியோ எடுப்பது அதிகரித்தாலும், போட்டோ எடுத்துக் கொள்ளவும்  மக்கள் தவறுவதில்லை. கொஞ்சம் பயிற்சியும் ஆர்வமும் இருந்தால் யார்  வேண்டுமானாலும் ஸ்டுடியோ துவங்கலாம். குறித்த நேரத்தில் டெலிவரி, குறைந்த கட்டணம், தரமான கார்டில் போட்டோக்கள்  கொடுத்தால், வாடிக்கையாளர்களின் குடும்ப போட்டோகிராபராக மாறலாம். அதன் மூலம் தொழிலை விரிவு படுத்தலாம்.

தொழில் துவங்குபவர்கள் கையடக்க டிஜிட்டல் கேமராவை கொண்டு தொழில் துவங்கலாம். புதிய கேமரா 5 ஆண்டுக்கு ரிப்பேர் செலவு வராது. புது கம்ப்யூட்டர் வாங்கினால் 3 ஆண்டுகளுக்கு சர்வீஸ் செலவு வராது. பழைய கேமராவோ, புது கேமராவோ சில நேரங்களில் மெமரி கார்டில் வைரஸ் தாக்கினால் அதை சரிசெய்ய ரூ.1500 வரை செலவாகும். தொழில் வளர்ச்சி பெற்றவுடன் ஸ்டுடியோவுக்கென்று எஸ்எல்ஆர் கேமராக்கள் உள்ளன. விலை கூடுதலாக இருந்தாலும் (ரூ.50 ஆயிரம் வரை), போட்டோக்கள் சிறப்பாக இருக்கும்.

கட்டமைப்பு!

10க்கு 20 அடி நீள, அகலமுள்ள அறை இருந்தால் போதும். அதில் பாதி ஸ்டுடியோ, கால்பாகம் மேக்கப் அறை, கால் பாகம் அலுவலக அறை அமைக்க ஒதுக்க வேண்டும். இன்டீரியர் டெக்கரேஷன் செலவு ரூ.10 ஆயிரம் ஆகும். அறை அட்வான்ஸ் ரூ.20 ஆயிரம்.

முதலீடு!

ஸ்டுடியோ அறையில் பேக்கிரவுண்ட் ஸ்கிரீன்(ரூ.200), ஸ்டூல் 1 (ரூ.125), பேபி சேர் 1 (ரூ.125), அம்ப்ரல்லா லைட் 800 வாட்ஸ் 2 (ரூ.16 ஆயிரம்), கேமரா குறைந்தபட்சம் 5 எக்ஸ் ஆப்டிகல் லென்ஸ், 16 மெகா பிக்ஸல் திறனுள்ள கேமரா 1 (ரூ.12 ஆயிரம்.) மேக்கப் ரூம் ஆளுயர கண்ணாடி 1 (ரூ.1000), போட்டோ கலர் கரெக்ஷன் செய்ய கம்ப்யூட்டர் 1 (ரூ.25 ஆயிரம்), பிரின்ட் எடுக்க பக்கெட் பிரின்டர் 1 (ரூ.8 ஆயிரம்.). டேபிள் 1 (ரூ.4 ஆயிரம்.), சேர் 4 (ரூ.1,200), போட்டோ டிஸ்ப்ளே போர்டு (தெர்மோகோலில் வெல்வெட் துணி மூடி பிரேம் செய்தது) 3 (ரூ.2,250), ஸ்டுடியோ பெயர் பலகை 1 (ரூ.3 ஆயிரம்). கட்டிங் கருவி (ரூ.1,100), மொத்த முதலீடு ரூ.1.04 லட்சம்.

நிர்வாக செலவு!

வாடகை ரூ.2 ஆயிரம், மின்சார செலவு ரூ.500, 900 போட்டோ கார்டு அடங்கிய, பிரின்டர் கேட்ரிஜ் 6க்கு ரூ.7,800. அழகு சாதன பொருட்கள் ரூ.200, கேமரா, கம்ப்யூட்டர் சர்வீஸ் ரூ.100, ஆல்பம் 5 ரூ.1000, இதர செலவுகள் ரூ.1000, மொத்த செலவு ரூ.12,600.

மாத வருவாய்

ஸ்டுடியோவில் சராசரியாக தினமும் 10 பேருக்கு பாஸ்போர்ட் படம் எடுத்தால் மாதம் 250 பேர் ஆகிறது. நபருக்கு குறைந்தபட்சம் ரூ.50 வீதம் ரூ.12,500. வெளியே நடைபெறும் விழாக்கள் சராசரியாக 5 ஆர்டர் வருவதாக வைத்து கொண்டால் குறைந்தபட்சம் ஒரு ஆர்டருக்கு 70 படங்களாவது எடுக்க வேண்டியிருக்கும். ஒரு ஆர்டருக்கு ரூ.3400 வீதம், 5 ஆர்டருக்கு ரூ.17 ஆயிரம் கட்டணம். மொத்த வருவாய் ரூ.29,500. செலவு போக லாபம் ரூ.16,900. இதை உழைப்புக் கூலியாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

வாடிக்கையாளர்கள் கூடக்கூட ஆர்டர்கள் பெருகும். கூடுதலாக ஒரு கேமரா வாங்கி, போட்டோ எடுக்க சம்பளத்துக்கு ஊழியர் நியமித்தால் வருவாய் பெருகும். போட்டோவோடு வீடியோவும் எடுப்பதற்கேற்ப கேமராக்கள் உள்ளன (ரூ.25 ஆயிரம் போதும்). இதை வாங்கிக் கொண்டால் இரண்டையும் ஒரே நேரத்தில் செய்து வருவாயை பெருக்கலாம். 

பள்ளி சேர்க்கை, தேர்வு, வங்கி கணக்கு என எல்லாவற்றுக்கும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தேவை.எனவே நாள் தவறாமல் புகைப்படம் எடுக்க யாராவது வந்து கொண்டு இருப்பார்கள். திருமண நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் காதுகுத்து, சீர் என்று அனைத்திற்கும் போட்டோ எடுக்கும் வழக்கம் உள்ளதால் தொழிலில் தொய்வு இருக்காது.

போட்டோ எடுப்பது எப்படி?


கையிலேயே டிஜிட்டல் கேமராவை பிடித்து படம் எடுக்கலாம். ஸ்டாண்ட் தேவை இல்லை. போட்டோ எடுக்கும்போது லைட்டிங் முக்கியம். ஸ்டுடியோவில் படம் எடுக்க அம்ப்ரல்லா லைட்டிங் போட்டு, அதன் வெளிச்சத்தில் கேமராவை கிளிக் செய்தால் போதும். வெளியே என்றால் அறைக்குள் அல்லது இரவு நேரங்களில் எடுக்கும்போது லைட்டிங் பற்றாக்குறையை ஈடுகட்ட பிளாஷ் உபயோகிப்பது, பகலில் அறைக்கு வெளியே என்றால் மேகமூட்டம், சூரிய வெளிச்சம் ஆகிய இயற்கை ஒளிக்கேற்ப மோடு அட்ஜஸ்ட் செய்து கேமராவை கையாள்வது, குளோஸ் அப் மற்றும் லாங்ஷாட்டுக்கு ஏற்ப ஜூம் உபயோகிப்பது ஆகியவை அடிப்படை விஷயங்கள். அனுபவத்தில் கற்றுக்கொள்ள ஒரு வாரம் போதும்.

கேமராவில் எடுத்த படங்களை கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்து, அந்த படங்களை கம்ப்யூட்டர் மூலம் கலர் கரெக்ஷன் போட வேண்டும். இது படங்களை தெளிவாக்கும். இதையும் ஒரு வாரத்தில் கற்கலாம். கம்ப்யூட்டரில் கலர் கரெக்ஷன் செய்த பிறகு படங்களை பிரின்ட் செய்ய வேண்டும். ஒரு கார்டில் 8 பாஸ்போர்ட் படங்கள் வரை பிரின்ட் செய்யலாம். பிரின்டாகி வரும் கார்டில் உள்ள படங்களை பாஸ்போர்ட், ஸ்டாம்ப் சைஸ், 2பி ஆகிய சைஸ்களுக்கேற்ப கட்டிங் கருவி மூலம் வெட்டினால் போட்டோ ரெடி. போட்டோ எடுத்து 10 நிமிடத்தில் படம் கொடுக்கலாம். வெளியே சென்று எடுக்கப்பட்ட 70 படங்களை 2 மணி நேரத்தில் பிரின்ட் செய்து கொடுக்கலாம்.

தொழில் உலகம் - வேலை வாய்ப்பு

தொழில் உலகம் ஆன்லைன் பத்திரிக்கைக்கு தொழில் சார்ந்த கட்டுரைகள், பேட்டிகள், நிறுவன மற்றும் புதிய / நவீன பொருட்களின் அறிமுகங்கள், வர்த்தக விளம்பரங்கள், வரிவிளம்பரங்கள் சேகரிக்க அனுபவம் அல்லது ஆர்வமுள்ள இளைஞர்கள் உடனடியாக தேவை.

முழுநேரம் / பகுதிநேரம் பணியாற்றி நல்ல வருமானம் ஈட்டலாம்.

10 முதல் 15 சதவீத கமிசன் பெறலாம்.

இன்சண்டீவ் உண்டு.

தொடர்ந்து 3 மாதங்கள் திறமையாக பணியாற்றினால் நேரடியாக பணியில் சேரும் வாய்ப்பு உண்டு.

தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் வசிப்போரும் இதில் சேரலாம்.

தமிழகத்தில் ஒவ்வொரு நகரத்திற்கும் ஒருவர் மட்டுமே நியமிக்கப்படுவர்.

நன்கு பணி செய்வோர் எங்களின் மற்ற இணையப் பத்திரிக்கைகளுக்கும் முகவராக நியமிக்கும் வாய்ப்பு உண்டு.


தகுதி: குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்வு. தன்னம்பிக்கையுடன் உழைக்க வேண்டும் என்ற ஆர்வமுடையோர்.
 விண்ணப்பிக்க விரும்புவோர் உடனே தங்களின் சுய விபரங்கள், தொழில் அனுபவம் அல்லது ஆர்வம், திறமை, வெளியுலகத் தொடர்பு, பணி செய்ய விரும்பும் நகரம், முகவரி , தொடர்பு எண்கள், இ மெயில், படிப்பு ஆகிய விபரங்களை எங்களுக்கு இ - மெயிலில் அனுப்பி வைக்கவும்.


 
தொழில் உலகம். காம்

தொடர்புக்கு : 0 - 7373630788 

Mail:tholilulagam@gmail.com, admin@tholilulagam.com

அன்பு தொழில் உலக நண்பர்களுக்கு,



அன்பு தொழில் உலக நண்பர்களுக்கு,

இனிய வணக்கம்.

தொழில்உலகம்.காம் தினசரி இலட்சக்கணக்கான வாசகர்களால் வாசிக்கப்படும் தொழில் தொடர்பான இணைய பத்திரிகை ஆகும். கடந்த 5 வருடங்களாக கூகுள் தேடலில் முதலிடத்திலும், கூகுள் தர வரிசைப் பட்டியலில் இரண்டாம் இடத்திலும், தமிழில் வெளிவரும் முதல் மற்றும் No 1 இணையத் தளமாகவும் விளங்கிகிறது.

தொழில் கட்டுரைகள், நிறுவன அறிமுகங்கள், தொழில் ஆலோசனை, தொழில் திட்டங்கள், கடன் பெறும் விபரங்கள், மெசினரி விற்பனை, முகவர் தேவை என பன்முக விபரங்களுடன் 2500 கும் மேற்பட்ட தினசரி புதிய புதிய உலக அளவிலான 25 கும் மேற்பட்ட நாடுகளின் வாசகர்களையும் கொண்டுள்ளது. மேலும் உலகின் 50 கும் மேற்பட்ட மொழிகளில் மொழிமாற்றி படிக்கும் வசதியையும் கொண்டுள்ளது.

புதிய தொழில்களை துவங்க வேண்டும் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என துடிப்போடு அலைபவர்களும், தொழில் துவங்கி விட்டோம் எப்படி வெற்றி பெறுவது என தேடுபவர்களும், தொழிலுக்கு தேவையான மெசினரிகள், பொருட்களை எங்கு வாங்குவது? என்ற தேடல் உள்ளவர்களுக்கும் தொழில்உலகம்.காம் வெயிலுக்கு நிழல் தரும் மரமாய் விளங்குவதை எங்கள் வாசகர்கள் தரும் விமர்சனங்கள் உணர்த்தும்.
ஆகவே, இந்த தொழில் இணையப் பத்திரிகையில் விளம்பரங்களை வெளியிட்டு பயன்பெறுமாறு கேட்பதோடு, உங்களுடைய வியாபரத்தை பெருக்கும் தங்களின் முயற்சியில் கைகோர்க்க மகிழ்சியுடன் காத்திருக்கிறோம்

கூடுதல் தகவல்கள் தேவை எனில், கீழ்கண்ட தொடர்பு எண் மூலம் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். நன்றி!

தொடர்பு எண்: 0 – 7373630788, sales@tholilulagam.com, tholilulagam@gmail.com

தொழில் உலகம் - தொடர்புக்கு



Regd Office:


P.J. Selvam.,

No: 54, Krishna Nagar,

Sowripalayam (po),

Coimbatore – 641028

Tamilnadu



Admin office:



Perambur,

Chennai



Cell:  0-7373630788

Mail:  tholilulagam@gmail.com 
          sales@tholilulagam.com
Website: www.tholilulagam.com

இரு சக்கர , நான்கு சக்கர வாகன சர்வீஸ் லிப்ட் (scissor lift)

Monday, 11 May 2015

இரு சக்கர , நான்கு சக்கர வாகன சர்வீஸ் சென்டர் வைத்துள்ளீர்களா?

தங்கள் வேலையை எளிதாக்க எங்கள் ஸ்கை நிறுவனத்தின் சிசர் லிப்ட் வாங்கி விட்டீர்களா?
 
உடனே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்!
எங்கள் தயாரிப்பை வாங்கி வாழ்க்கையில் ஓர் மைல் கல்லை தாண்டிடுங்கள்!

மார்க்கெட்டிங் மற்றும் ஏஜென்ட் விசாரணைகள் வரவேற்கபடுகிறது.

தொடர்புக்கு : 07373630788 
 ஸ்கை குரூப் ஆப் கம்பெனீஸ்




We have been providing excellent light and Heavy duty scissor lift. It can be use All branded two wheeler. And also three wheeler service station equipments . We can provided all brand two wheeler panel board and power packs.

Tholilulagam certified & Verified this Product. If you need this Product please contact 0-7373630788, SKY GROUP OF COMPANIES

 We have manufactured all branded two wheeler Automobile special tools, garage equipments like two wheeler washer, car washer, four wheeler single post hoist, 1 Hp to 5 Hp compressor for tools operating.
Our Products Strength:

Excellent strength,
High Accuracy
High efficiency
Simple and easy operation
Rust proof
 
Inviting Marketing & Agency Enquiry.
 

ஈவென்ட் மானேஜ்மென்ட் ( Event management) தொழில் - எப்படி செய்வது - ஓர் பார்வை

Friday, 13 February 2015

 இன்று நகர்ப் புறங்களில் மிகவும் தேவைப்படும் வெற்றிகரமான தொழில்(Business) இது.

முன்பெல்லாம் இல்லங்களில் கல்யாணம்(Marriage), காதுகுத்து, சடங்கு என்று நடக்கும். அதற்கு அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் என்று ஆளுக்கு ஒரு வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து முடித்து விடுவார்கள். பிறகு கல்யாணங்களுக்கு காண்ட்ராக்ட்(Contract) முறை வந்து விட்டது. சமையல் பணியை எடுத்து நடத்துபவர்களே A-Z கல்யாணம் சம்பந்தப் பட்ட வேலைகளை செய்து தருகிறார்கள். கல்யாணம் போன்ற பெரிய நிகழ்ச்சிகளுக்கு(Events) இது பொருந்தும். இதைத் தவிர மற்ற விழாக்கள், கொண்டாட்டங்கள் நடத்த வேண்டும் என்றால்?



இன்றைய வாழ்க்கை முறையில் “பார்ட்டி” இல்லாத வீடுகள்(Houses) உண்டா? திருமண நாள் கொண்டாட்டம், புதுமனை புகு விழா, குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட்டம், நியூ இயர் பார்ட்டி இது தவிர, அபார்ட்மெண்ட்களில்(Apartments) – பண்டிகைகள், கெட்-டு-கெதர்,
இப்படி எத்தனையோ!

சிறிய, நடுத்தர அளவிலான நிறுவனங்கள் கூட – தங்களுடைய ஊழியர்களை (Employees)உற்சாகப் படுத்துவதற்காக வருடாந்திரக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

இந்த மாதிரி விழாக்களை நல்ல முறையில் நடத்திக் கொடுப்பதுதான் ஈவண்ட் மானேஜ்மெண்ட்(Event management).



கேள்வி பதில் மாடலில் பேசலாமா?

முதலில் நான் செய்ய வேண்டியது என்ன?

நீங்கள் ஒரு ஈவண்ட் மானேஜ்மெண்ட் கோ ஆர்டினேட்டராக(Co Ordinator) வேண்டும் என்று முடிவெடுத்து விட்டீர்களா! நல்லது. முதலில் இந்தத் தொழிலுக்குத் தேவையான தகவல்களை(Informations)  சேகரித்து, ஒரு டேட்டா பேஸை(Database) உருவாக்குங்கள்.

டேட்டா பேஸ்? என்ன மாதிரியான தகவல்கள்?

வாடிக்கையாளர்கள் - யார் - விழாக்கள், பார்ட்டிகள் நடத்துபவர்கள்.

அவர்களின் தேவை என்ன? விழாக்களுக்கான சிறப்பான ஏற்பாடுகள், விருந்து, பரிசுகள் முதலியன.

தேவையான பொருட்கள்(Products) கிடைக்கும் இடம், அவற்றை வழங்குபவர்கள், விலை, தரத்தின் ஒப்பு நோக்கு போன்ற விபரங்கள்.
தனியாக அலுவலகம்(Separate Office) தேவைப்படுமா?

ஆரம்பத்தில் தேவையில்லை. உங்கள் வீட்டு விலாசம்(Address), கைபேசி எண்ணை(Mobile no) உபயோகிக்கலாம்.

வாடிக்கையாளர்கள்(Customers) என்னை எப்படி அணுக முடியும்?

உங்கள் அபார்ட்மெண்ட் தகவல் பலகையில் உங்களைப் பற்றிய விவரங்கள் கொடுக்கலாம்.

நண்பர்கள், உறவினர்களுக்கு ஈ மெயில்(E Mail), எஸ்.எம்.எஸ்(SMS) மூலம் தெரிவித்து, விளம்பரம் தேடலாம்.

உங்கள் பகுதியில் வரும் பத்திரிக்கைகளில் பேப்பர் இன்ஸர்ட் வைத்து, விளம்பரம்(Advertisement) செய்யலாம்.

நேரடியாக நிறுவனங்களை அணுகி, உங்களைப் பற்றிய தகவல் அடங்கிய கையேடைக் கொடுக்கலாம்.

எனக்கு இன்னும் கொஞ்சம் தெளிவான ஐடியா(Idea) தேவை:
ஒரு உதாரணத்துடன் பேசினால் நன்றாகப் புரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

உங்கள் அடுத்த வீட்டில் வசிக்கும் லல்லிக்குப் பிறந்த நாள். அவளது பெற்றோர்கள் உங்களை ஈவண்ட் மானேஜ்மெண்ட்டுக்காக அணுகுகிறார்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும்? இந்த விழாவை எப்படி சிறப்பாக நடத்திக் கொடுப்பீர்கள்?

இந்த இடத்தில் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கள். அறுசுவையின் மற்ற பகுதிகளைக் கொஞ்ச நேரம் பார்த்து விட்டு, பின் ஒரு பேப்பரை(Paper) எடுத்து, என்னவெல்லாம் செய்வீர்கள் என்று எழுதுங்கள்.

என்ன இது பரீட்சையா என்று தோன்றுகிறதா, நமக்கு நாமேதானே மார்க் போட்டுக் கொள்ளப் போகிறோம், சரிதானே.

என்ன, யோசித்து விட்டீர்களா? சரி, பார்க்கலாம்.

முதலில் லல்லியின் பெற்றோர்களிடம் நிறையப் பேசி, டிஸ்கஸ் செய்ய வேண்டும்.

என்றைக்கு பிறந்த நாள், விழா நடக்கும் நேர அளவு, எத்தனை பேர் வருவார்கள், பெரியவர்கள், குழந்தைகள்(Kids) எத்தனை பேர், நடக்கும் இடம், முக்கியமாக அவர்களின் பட்ஜெட்...

விழா நடக்கும் நேரம் தெரிந்ததும் விருந்து எப்படி இருக்க வேண்டும், மெனு(Menu) இதெல்லாம் முடிவு செய்து விடலாம்.



வரும் விருந்தினர்களுக்கான கேம் ஷோ, குழந்தைகளுக்கான விளையாட்டுக்கள்(Kids Games), ரிடர்ன் கிஃப்ட், அதற்கான பட்ஜெட்...
பார்ட்டி ஹாலின் அலங்காரம், விருந்தினர்களுக்கான இருக்கைகள், புகைப் படம்(Photos), வீடியோ(Video) எடுக்க ஏற்பாடுகள், முக்கியமாக கேக்கின் அளவு, சுவை(Taste), அதில் எழுத வேண்டிய வாசகம்.. இப்படி எந்த சின்ன தகவலையும் விட்டு விடாமல், கவனமாகக் கேட்டு, குறித்துக் கொள்ளுங்கள்.

அப்பாடி, இத்தனை வேலையையும் நானே செய்ய வேண்டுமா? என்று மலைப்பாக இருக்கிறதா? வெயிட்..வெயிட்!

நீங்கள் இந்த வேலைகளை சரியான ஆட்களிடம்(Man Power) ஒப்படைத்து, அவை சரியாக நடக்கிறதா என்று மேற்பார்வை பார்த்து, தட்டிக் கொடுத்து, (திட்டி) வேலை(Work) வாங்கி, எதேனும் பிரச்னைகள் வந்தால் அழகாக சமாளித்து(பாத்தீங்களா, பாத்தீங்களா, இதெல்லாம் என்னால் எப்படி முடியும்) லல்லியின் பெற்றோர்கள் உங்களிடம் நன்றி சொல்லும் போது, அழகாகப் புன்னகைத்து ...
இரண்டொரு நாளில் பில்(Bill) அனுப்புகிறேன் என்று சொல்லி.. இவ்வளவுதான், இவ்வளவேதான் ஈவண்ட் மானேஜ்மெண்ட்.

வேலையில் இறங்கி விட்டால் நீங்கள் எவ்வளவோ கற்றுக் கொள்ளலாம்(Learn), சாதிக்கலாம், சம்பாதிக்கலாம்.

பேக்கரி, காட்டரர், கேம்ஸ் ஷோ(Game Show) நடத்துபவர், வீடியோகிராஃபர் மற்றும் அலங்காரப் பொருட்கள் கிடைக்கும் கடைகள்(Shops) எல்லாமே ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்பு விலாசங்கள் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். மாற்று ஏற்பாடுகள் செய்ய, விலை(Price), தரம் ஒப்பிட்டு நோக்க உதவியாக இருக்கும்.

வேலைகளுக்கான செக் லிஸ்ட் வைத்துக் கொண்டு, அவ்வப்போது சரி பாருங்கள்.

ரிடர்ன் கிஃப்ட்(Gift), விருந்து இவற்றில் பற்றாக்குறை ஏற்பட்டால், செய்யக்கூடிய/செய்ய வேண்டிய ஆல்டர்னேடிவ் பற்றி முதலிலேயே யோசித்து வைத்துக் கொள்ளுங்கள்.

எல்லாம் சரி, வருமானம் என்ன கிடைக்கும்?

நீங்கள் வாங்கிய பொருட்கள், பேக்கரி, காட்டரர் போன்றோருக்குக் கொடுத்த சம்பளம், இப்படி எல்லா செலவினங்களுக்கும் பில், வவுச்சர், பத்திரமாக வைத்துக் கொண்டு, ஒரு ஸ்டேட்மெண்ட் தயாரியுங்கள். (தொலைபேசி, போக்குவரத்து(Transport) செலவு உட்பட)

இதன் மொத்தக் கூட்டுத் தொகைதான் அசல் செலவு. (Actual Expenses). இந்தத் தொகையுடன் குறைந்த பட்சம் 15 சதவிகிதம் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த 15% சதவிகிதம்தான் உங்களுடைய் லாபம்(Profit).

சில டிப்ஸ்:

ஆரம்பத்தில் சிறிய பார்ட்டிகளை(Party) நடத்திக் கொடுத்து, கொஞ்சம் அனுபவம் வந்த பின், உதவியாளர்களை சேர்த்துக் கொண்டு, பெரிய விழாக்களை நடத்திக் கொடுக்கலாம்.

விழாக்கள் ஒவ்வொன்றும் ஒரு விதம். இல்லங்களில் நடைபெறுவதும், அலுவகங்களுக்கான கொண்டாட்டங்களும் வேறுபட்டிருக்கும். வாடிக்கையாளர்களிடம் பேசி, அவர்களின் தேவையை சரியாகப் புரிந்து கொள்வது முக்கியம்.

என்னதான் சொன்னாலும் ஆண்கள் இந்த மாதிரி மொத்த காண்ட்ராக்ட்(Contract) எடுத்து நடத்துவது போன்ற வேலையை செய்வார்கள், பெண்கள் செய்வது முடிகிற காரியமா என்ன?

சென்னையில் இரு பெண்கள் – ஷோபா, வித்யா என்று பெயர், அவர்கள் இருவரும் விபா என்ற பெயரில் மிகவும் சிறிதாக ஈவண்ட் மானேஜ்மெண்ட் தொடங்கினார்கள். இன்று சென்னையின் முக்கிய வருடாந்திர நிகழ்வுகள் எல்லாமே அவர்கள் பொறுப்பேற்று நடத்துவதுதான். மிஸ் சென்னை, திருமதி சென்னை, மிஸ்டர் சென்னை, மாம் & ஐ என்று பல நிகழ்ச்சிகள். தவிர மிகப் பெரிய கார்ப்பரேட்(Corporate) நிறுவனங்களின் விழாக் கொண்டாட்டங்களின் பொறுப்பும் இவர்களிடம்தான்.

நடிகை திரிஷா இவர்கள் நடத்திய அழகிப் போட்டியில் வென்றுதான் பின்னர் மாடலாகவும், இப்போது நடிகையாகவும் மின்னுகிறார்.

பொருட்களின் விற்பனை வளர்ச்சிக்கு தேவையானவை ( Business Sales ImprovementTips)

Sunday, 25 January 2015

Product, Price, Place, Promotion (4p's) கலவையை, பொருளின் தன்மையை பொறுத்து சரியான விகிதத்தில் பயன்படுத்தி காலத்திற்கு ஏற்ப வியூகம் அமைத்தால் பிராண்ட் மதிப்பு (Brand Value)  நிலைத்திருக்கும். 

www.tholilulagam.com


பொருளை தயாரிக்க பொசிசனிங் எவ்வாறு செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்த பிறகே 4P யை சரியான விகிதத்தில் செயல்படுத்த வேண்டும்.

என்பீல்டு புல்லட் பயன்படுத்துவதை அந்த கால தொழில் அதிபர்களும் நிலக்கிழார்களும் பெருமையாக கருதினார்கள். அதன் வடிவமைப்பும், கம்பீரமும் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும்.

www.tholilulagam.com


நாற்பது ஆண்டுகளைக் கடந்தும் ஒரே என்பீல்டு புல்லட்டை பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஒரு பொருள் பயன்படும்படி வடிவமைத்தால், அதனைத் தயாரிக்கும் நிறுவனம் எவ்வாறு அதிக பொருட்களை விற்று லாபம் சம்பாதிக்க இயலும்? ஆகவேதான் என்பீல்டு இந்தியா நிறுவனம் நட்டத்தில் இயங்கியது. எட்டு ஆண்டுகளுக்கு முன் இந்த நிறுவனத்தை ஈச்சர் (Eicher Group) வாங்கியது.

 நிறுவனத்தை வாங்கிய உடனே சரியான பொசிசனில் ஈடுபட்டது.தொழில் அதிபர்களையும்  இளைஞர்களையும் கவரும் வண்ணம் புல்லட்டை வடிவமைத்து பொசிசன் செய்தது.

www.tholilulagam.com

பொருள் (Product)

பொருளை வடிவமைப்பதற்கு முன் வாடிக்கையாளர்களின் எதிபார்ப்புகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் டிசைன் செய்ய வேண்டும்.

நாம் வடிவைக்கும் பொருளானது தரத்திலும் செயல்பாட்டிலும் சிறந்ததாக இருக்க வேண்டும்.

பேக்கஜ் வடிவமைப்பு உறுதியாகவும் வாடிக்கையாளர்களின் உள்ளம் கவரும் வகையிலும் இருக்க வேண்டும்.

விலை (price)

பொருளை வெற்றிகரமாக தயாரித்தாகி விட்டது. போட்டியாளர் பொருளின் விலை என்ன? என்ன விலை வைத்தால் நம் பொருளை வாடிக்கையாளர் வாங்குவர் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இலாப விகிதம் எவ்வளவு வைக்கலாம்? எவ்வளவு கழிவுகள் கொடுக்கலாம்?  என்பதை ஆய்வு செய்ய வேண்டும். விலை மதிப்பு அதிகமுள்ள பொருளுக்கு இன்ஸ்டால்மெண்ட் வசதி இருந்தால்தான்  வாடிக்கையாளர் நம் பொருளை வாங்க முன்வருவார்கள். சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கேட்ப பொருளின் விலை அமைக்கப்பட வேண்டும்.

 விநியோகம் (Place)

கணினி போன்ற பொருட்களை நேரடியாக விற்பதைவிட விநியோகஸ்தர்கள், மின் வணிக நிறுவனங்களுடன் கூட்டு வைத்து விற்கலாம். மின் வணிக நிறுவனங்கள், இன்வன்டரி மடலுக்கு பதிலாக மார்க்கெட் பிளேஸ் மாடலை பின்பற்றுவதால் வாட் வரி செலுத்த வேண்டியது இல்லை.


விற்பனை மேம்பாடு (Promotion)

ஏற்ற முறையில் விளம்பரம்(Advertisement) செய்யலாம். தற்போது ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்வது மிகவும் பயன் தருகிறது. நேரப் பற்றாக்குறையாலோ, ஆன்லைனில்(Online) விளம்பரம் செய்யத் தெரியவில்லை என்றாலும் நம் தொழில் உலகம் குவினரைத் தொடர்பு கொள்ளலாம். குறைந்த செலவில் தகுதியான இணையத் தளங்களில் விளம்பரம் செய்து தருவார்கள். மேலும் தங்களுக்கென ஒரு வெப்சைட்(Website) துவக்கி அதில் தங்கள் பொருட்களின் விலை, போட்டியாளர் பொருட்களுடன் தங்கள் பொருளின் வித்தியாசம், நன்மைகள், தரம் பற்றிய விபரங்களை போடுவதன் மூலம் தங்கள் நிறுவன மதிப்பை உயர்த்தலாம். ஒருவேளை குறைந்த செலவில் அல்லது தரமான வெப்சைட்டை உருவாக்க விரும்பினால் அதற்கும் தொழில் உலகம் குழுவைத் தொடர்பு கொள்ளலாம்.

 பலரும் வெப்சைட்(Website) எங்களிடம் சில வருடங்களாக உள்ளது. ஆனால் தொழில் சார்ந்த விசாரணைகள் வரவில்லை என குறைபடுவதுண்டு. அதற்கு சர்ச் எஞ்சின் ஆப்டிமைசேசன் செய்ய வேண்டும் அதென்ன SEO என்கிறீர்களா? கூகுள் போன்ற தேடுபொறிகலைத்தான் பொருட்கள் தேவைகளைத் தேட பலரும் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு தேடும்பொழுது நம்முடைய இணையத்தளம் அதில் தென்பட்டால்தான் வாடிக்கையாளர் நம் வெப்சைட்டை கண்டுபிடிப்பார். இல்லையெனில் வேறு நிறுவன இணையத் தளத்திற்கு சென்றுவிடுவார். ஆகவே தேடுபொறிகளிலும், இணைய டைரக்ரிகளிலும் இணைப்பது மிக மிக முக்கியமானது. இதனை நன்கு அனுபவம் வாய்ந்த நிறுவனம்  செய்வதுவே சாலச் சிறந்தது. தங்களுக்கு SEO செய்யவும் தொழில் உலகம் குழுவைத் தொடர்பு கொள்ளலாம்.

 மேலும் தங்களின் வீடியோக்களையும் ஆன்லைனில் தொழில் உலகம் மூலம் விளம்பரம் செய்யலாம். தகவல்களை நேரடியாக பார்த்து புரிந்து கொள்ள வீடியோ விளம்பரங்கள் மிகவும் சிறந்தது.

கூகுளில் விளம்பரம் செய்யவும் தொழில் உலகம் மூலம் விளம்பரம் செய்யலாம்

 இந்த 4 P வியூகத்தை வெளிச் சூழ்நிலை மற்றும் அரசின் கொள்கை முடிவு, வரி விதிப்பிட்கேட்ப மாற்றி அமைத்தால்தான் சந்தையில் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்க முடியும்.

தொழில் உலகம் குழுவைத் தொடர்பு கொள்ள;

E-Mail: tholilulagam@gmail.com

Cell; 0-7373630788






இடம் வாங்க(Land Purchase), வீடு கட்ட(House/Flat Construction), வீடு வாங்க(House/Flat Purchase) மற்றும் வீட்டு அடமானக் கடன் தேவையா?

Friday, 23 January 2015

அன்பு நண்பர்களே! 


மனித வாழ்வில் உணவு(Food), உடை(Dress), உறைவிடம்(House),  இந்த மூன்றும் மிகவும் இனியிமையாதது. அதிலும் வீடுதான்(Home) நமக்கு நிம்மதியும் சேர்த்து தருவது. ஆனால் அந்த வீடு வாடகை  வீடென்றால் நம் நிம்மதி நிஜமாகவே கேள்விக்குறிதான்???

ஒருவேளை நீங்கள் வாடகை வீட்டில் வசிக்கிறீர்களா?

ஏன் நீங்கள் உங்கள் கேள்விக்குறியை ஆச்சரியக் குறியாக்கக் கூடாது?



கொஞ்சம் சேமிப்புத்தான் இருக்கிறது என்ன செய்வது  என்ற கவலையே வேண்டாம். நிச்சயமாக நீங்கள் வீடு கட்டி குடியேறலாம். நியாயமான வட்டியில் இந்தியாவின் மிகவும் தரமான, நீண்ட காலம் சேவையிலுள்ள, மக்களோடு மக்களாக அனுபவம் பெற்ற  முதல் தர வீட்டு வசதி நிறுவனத்தில்(Housing Finance) கடன் பெற்றுத் தருகிறோம்.

நாங்கள் இடம் வாங்க(Land Purchase), வீடு கட்ட(House/ Flat Construction), வீடு வாங்க (House/Flat Purchase), இடம் +வீடு கட்ட(Composite), வீட்டை விரிவாக்கம்(House Extension) செய்ய,  வீட்டை புதுப்பிக்க (Renovation) மற்றும் அடமானக் கடன்கள்(Mortgage) பெற்றுத் தருகிறோம். 

 எங்கள் மூலம் லோன்(Loan)  பெறுவதால் கிடைக்கும் நன்மைகள்:

மிக நீண்ட லோன் அனுபவம் பெற்ற அலுவலர்களால் உங்கள் விண்ணப்பம்(Application) பரிசீலனை செய்யப்பட்டு பின்னர் விண்ணப்பிக்கப் படுவதால் உங்கள் அப்ப்ளிகேசன் ரிஜக்ட் ஆகாமல் தவிர்க்கப் படுகிறது.

மேலும் சரியான தகவல்கள் சேகரித்து விண்ணப்பத்துடன் (Documents) இணைக்கப்படுவதால் தேவையற்ற கால விரையம் தவிர்க்கப் படுகிறது.

தங்களின் நேரம் மிச்சப்படுத்தப் படுவதோடு வீடு கட்டுவதை இடை நிறுத்துவது போன்ற அசௌகரியங்கள் தவிர்க்கப் படுகிறது.

பணம்(Money) கிடைக்குமோ கிடைக்காதோ என்ற அச்சம் தேவையில்லை 

குறைந்த வட்டியில் உடனடிக் கடன் பெற்று உங்கள் வீட்டை சொந்தமாக்க உடனே எங்களை தொடர்பு கொள்ளவும். மேலும் வீடு, இடம் விற்கும் ஏஜெண்டுகளும்(Agents), கட்டிடடப் பொறியாளர்களும்(Civil Engineers & Promoters) தங்கள் வாடிக்கையாளர்களுக்கு லோன் வசதியை பெற்றுத் தர தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

P. J.செல்வம், BE, M.Com
சென்னை
0-7373630788 

இந்திய விவசாய பொருட்கள் ஏற்றுமதி - முக்கிய சந்தைகள்

Sunday, 28 September 2014

 எதை எங்கு ஏற்றுமதி செய்யலாம்?



பூந்தோட்ட செய்கை 

அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி

பழங்கள் மற்றும் காய்கறி விதைகள்

 பாக்கிஸ்தான், வங்காளம், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் நெதர்லாந்து

புதிய வெங்காயம்

 வங்காளம், மலேஷியா, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாக்கிஸ்தான் மற்றும் நேபால்

மற்ற காய்கறிகள்

 ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்காளம், பாக்கிஸ்தான், நேபால் மற்றும் இலங்கை

அக்ரூட் பருப்புகள் 

ஸ்பெயின், எகிப்து, ஜெர்மனி, இங்கிலாந்து & நெதர்லாந்து

புதிய மாங்காய்களும்

 ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்காளம், இங்கிலாந்து, சவூதி அரேபியா மற்றும் நேபால்

புதிய திராட்சை

 நெதர்லாந்து, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட், வங்காளம், பெல்ஜியம்

மற்ற பழங்களும்

 வங்காளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, நேபால், சவுதி அரேபியா

உலர்ந்த & பாதுகாக்கப்பட்ட காய்கறிகள்

 ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி & ஸ்பெயின்

மாம்பழ கூழ்

 சவுதி அரேபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், Yamen, அரபு குடியரசு & குவைத்

ஊறுகாய் மற்றும் Chutneys

 ரஷ்யா, அமெரிக்கா, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ்

மற்ற பதனிட்ட பழங்கள்

 அமெரிக்கா, நெதர்லாந்து, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் சவுதி அரேபியா

எருமை இறைச்சி

 மலேஷியா, பிலிப்பைன்ஸ், சவுதி அரேபியா, ஜோர்டான் மற்றும் அங்கோலா

செம்மறி / ஆடு இறைச்சி 

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட், கத்தார், ஓமன் மற்றும் குவைத்

கோழி தயாரிப்புகள்

 ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், ஓமன், ஜெர்மனி & ஜப்பான்

பால் பொருட்கள் 

வங்காளம், அல்ஜீரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், Yamen, அரபு குடியரசு & எகிப்து

விலங்கு Casings 

ஜெர்மனி, போர்த்துக்கல், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலியிலும்

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

: செஷல்ஸ் , ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஹாங்காங், ஜெர்மனி & அமெரிக்கா

வேர்கடலையை 

இந்தோனேஷியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ், இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் Guar கம் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, இத்தாலி மற்றும் நெதர்லாந்து

வெல்லம் & கன்ஃபெக்ஸனரி

 போர்த்துக்கல், அமெரிக்கா, வங்காளம், பாக்கிஸ்தான் மற்றும் நேபால்

கொக்கோ தயாரிப்புகள் 

நேபால், நெதர்லாந்து, மலேஷியா, Yamen அரபு குடியரசு & ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

தானிய ஏற்பாடுகள் 

அமெரிக்கா, இங்கிலாந்து, நேபால், இலங்கை & ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

மது பானங்கள் 

ஜமைக்கா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அங்கோலா மற்றும் பூட்டான்

இதர ஏற்பாடுகள் 

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இந்தோனேஷியா தயாரிப்புகள் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தோனேஷியா, மாலத்தீவு மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் 

ஆலைஅரிசி 

சவுதி அரேபியா, குவைத், பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் Yamen அரபு பிரதிநிதி

அல்லாத அரிசி 

 நைஜீரியா, வங்காளம், தென் ஆப்ரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஐவரி கோஸ்ட்

கோதுமை 

வங்காளம், பிலிப்பைன்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சூடான் மற்றும் மியான்மர்

பிற தானியம் 

வங்காளம், இலங்கை, சூடான், பெனின், தாய்லாந்து

இயற்கை தேன் 

அமெரிக்கா, ஜெர்மனி, சவூதி அரேபியா, பிரிட்டன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

பருப்பு வகைகள்

 வங்காளம், இலங்கை, பாக்கிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் நேபால்

கோடீஸ்வரன் ஆவது எப்படி? / பணக்காரர் ஆவது எப்படி?

Wednesday, 27 August 2014

தலைப்பை கேட்ட உடனே பார்த்திபன் - வடிவேலுவின் காமெடி ஞாபகம் வருகிறதா?? சரி தான். இந்த தலைப்பு சிலருக்கு சரிப்பு மூட்டுவதாகவும், சிலருக்கும் கடுப்பு எற்றுவதாகவும் இருக்கும். இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு கோடி எல்லாம் வெறும் தெருக்கோடி துரம் தான். 20 ஆண்டுகளுக்கு முன் ரூ.5,000 சம்பாதித்தாலே அது பெரிய விஷயம். இப்போதெல்லாம் 20 வயதுப் பசங்களுக்கு அந்தப் பணமெல்லாம் கால் தூசுக்கு சமம். இப்படி இருக்க, 30 வயதுக்குள் ஒருவர் கோடிஸ்வரான ஆக முடியுமா? சில இளைஞர்களுக்கு அதுதான் அவர்கள் வாழ்க்கையின் முக்கியச் சவால். அதே எண்ணத்திலேயே முழு மூச்சோடு செயல்பட்டு அந்தச் சவாலில் வெற்றி பெறவும் துடிப்பார்கள். இந்த உலகில் பணத்துக்கு மட்டும் எப்போதுமே பற்றாக்குறை வருவதில்லை. பணத்தைப் பற்றிய நம் எண்ணங்களுக்குத் தான் பற்றாக்குறை. லட்சக்கணக்கில் பணத்தைச் செலவு செய்து கல்லூரிகளில் படிக்கும் போதே, ரூ.10,000 வரை பகுதி நேர வேலையில் சம்பாதிக்க வழி உள்ள இந்தக் காலத்தில், 30 வயதுக்குள் எவரும் கோடிஸ்வரான் ஆவதும் நிச்சயம் சாத்தியமே! அதற்கான சில வழிகளும் உள்ளன. அவற்றைப் பற்றிப் பார்ப்போமா?



 பணத்துக்குப் பின்னால்.......

இந்தக் காலப் பொருளாதார உலகில் லட்சாதிபதி கோடிஸ்வரான் முதல் வழி, உங்கள் சம்பாத்தியத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருக்கிக் கொள்ள வேண்டும். பணத்துக்குப் பின்னால் போகக் கூடாது என்று சிலர் சொல்வார்கள். அப்படிக் கிடையாது. கண்டிப்பாகப் போங்கள். கவனமாகப் பணம் சேர்ப்பதற்கான வழிகளைத் தேடுங்கள். வெற்றி நிச்சயம்!

 பகட்டு வேண்டாம்




சிறுகச் சிறுகக் கஷ்டப்பட்டு சேமித்துக் கொண்டிருக்கும் போது, நீங்கள் ஆடம்பரத்தைக்கண்டிப்பாகத் தவிர்க வேண்டும். உங்கள் தொழில் மற்றும் முதலீடுகளில் பணம் நன்றாகக் கொழிக்கும் வரை ஆடம்பர வாட்ச், விலை உயர்ந்த கார் என்று எந்தப் பகட்டும் வேண்டாம். பொறுமையாக இருக்க சொல்கிறோம் அவ்வளவுதான்!

முதலீட்டுக்காக சேமியுங்கள்




 உங்கள் சேமிப்பெல்லாம் அடுத்த சேமிப்புகளுக்கான பாதுகாப்பான முதலீடுகளாகத்தான் இருக்க வேண்டும். அதுவும் பல வழிகளில் முதலீடு செய்ய வேண்டும். எந்த ஒரு அவசரக் காரியத்துக்கும் கூட அதை எடுத்துச் செலவு செய்துவிட வேண்டாம்.

எப்போதும் கடன் வாங்க வேண்டாம்!


உங்கள் வளர்ச்சியில் கடன் என்ற வார்த்தையே இருக்கக் கூடாது. அது உங்களுக்கு மேலும் சம்பாத்தியத்தைப் பெற்றுத் தராது; வட்டித் தொகையை அதிகரித்து உங்களின் சேமிப்பையும் வளர்ச்சியையும் பதம் பார்த்து விடும். உங்கள் லட்சியத்தை அடைந்த பிறகு, கடன் வாங்கி அதை 'ரொட்டேட்' செய்வது வேறு விஷயம்.

 'பொறாமை' பணம்



 பணம் உங்களுக்கு ஒரு பொறாமைப்படும் காதலி தான். அதற்குக் கண்டிப்பாக முக்கியத்துவம் கொடுங்கள். நீங்கள் வேண்டும் என்று நினைத்தால் அது உங்களுடன் ஒட்டிக் கொள்ளும். நீங்கள் உதறினால், அதுவும் உங்களை உதறிவிடும்.

 பணம் உறங்குவதில்லை




 பணத்திற்குக் காலமோ, நேரமோ, விடுமுறையோ கிடையாது. நீங்களும் அதுபோலத்தான் இருக்க வேண்டும். நல்ல உழைப்பு இருப்பவனை எப்போதுமே பணம் விரும்பும். சரியான வழியில் அல்லது துறையில் உழைப்பை போடுவது ரொம்ப முக்கியம்.

ஏழையாக இருக்க வேண்டாம்




 எப்போதும் ஏழையாகவோ அல்லது போதும் என்ற மனத்துடனோ இருக்கக் கூடாது. விரைவில் பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் மேலோங்கி இருக்க வேண்டும்.

ரோல் மாடல் அவசியம்!



 நீங்கள் லட்சாதிபதி ஆவதற்கு, உங்களுக்கென ஒரு ரோல் மாடலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் எப்படியெல்லாம் தங்கள் வாழ்க்கையில் முன்னேறி, செல்வந்தர்கள் ஆனார்கள் என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

புத்திசாலித்தன முதலீடு



 உங்களால் எவ்வளவு முதலீடு செய்ய முடியுமோ அவ்வளவு மட்டும் முதலீடு செய்யுங்கள். அதையும் புத்திசாலித்தனமாகச் செய்யுங்கள். நீங்கள் செய்யும் கடின உழைப்பைவிட, புத்திசாலித்தனமான முதலீடுகள்தான் உங்களுக்குப் பணத்தைப் பெருக்கித் தரும்.

கோடீஸ்வரனாக ஆசைப்படு!!!



 எப்போதுமே பெரிய அளவில் நாம் சிந்திக்க வேண்டும். இந்த 30 வயதுக்குள் கோடீஸ்வரனாகிவிட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுங்கள். அப்போதுதான், குறைந்த அளவு லட்சாதிபதியாகவாவது ஆக முடியும். வாழ்த்துக்கள் வாசகர்களே!!

நிறுவன அறிமுகம்

நிறுவன அறிமுகம்

Popular Posts

Loading...
 

© Copyright தொழில் உலகம் 2010 -2011 | Design by Infotech Solutions | Published by Infotech Solutions Templates | Powered by Tamil Ulagam.